நாம் ஆற்றலும் முயற்சியும், விருப்பமும் உள்ள இளைஞர்களுக்கு செவிலியர் துறையில் முழுமையான தொழிற் கல்வியை வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.
மருத்துவ, சுகாதார சேவைக்கு இன்று இளைஞர்களின் வரவு மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
நாம் திறமையும் ஆர்வமும் உள்ளவர்களை செவிலியர் துறையில் வளர்த்தெடுக்க தயாராக உள்ளோம்.
சுவிஸ் நாட்டில் செவிலியர்கள் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் நாம் இளம் தலைமுறையினருக்கு செவிலியர் துறையில் தொழில்முறை கல்வி வாய்ப்பை வழங்க முன்வருகின்றோம். தற்போது எங்களிடம் தொழில்முறை கல்வி பயிற்சிக்கான இடங்கள் இல்லை. அவை மீண்டும் தயாரானதும் இந்தப் பக்கத்தில் உங்களுக்குத் தெரிவிப்போம்.
அதனால்தான், விரைவில் பயிற்சி நிலைகளை இங்கு விளம்பரப்படுத்துவோம். எவ்வாறாயினும், அதற்கான உத்தியோகபூர்வ அனுமதிகள் எங்களிடம் இல்லை. கூடிய விரைவில் நீங்கள் அதைப் பற்றி மேலும் படிக்கலாம்; மீண்டும் ஒரு முறை பாருங்கள்.