ஜூன் 19ஆம் தேதி Spitex Xundheit Plus நிறுவனம், நினைவழிவு நோய் (Demenz) என்ற தலைப்பில் அறிவுப்பூர்வமான மற்றும் பயனுள்ள சொற்பொழிவொன்றை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் மருத்துவர் ராஜசேகரன் ராஜ்மேனன் தன்னுடைய ஆழ்ந்த அறிவையும், நடைமுறை அனுபவங்களையும் பகிர்ந்தார்.
8055 சூரிக்கில் உள்ள Schweighofstrasse 429 என்ற முகவரியில் அமைந்துள்ள சமூகக் கூடத்தில் (Gemeinschaftsraum) நடைபெற்ற இந்நிகழ்வு, மதியம் 13:30 முதல் 17:00 மணி வரை நடைபெற்றது. இதில் Spitex Xundheit Plus நிறுவன ஊழியர்கள் மட்டுமல்லாமல், நினைவழிவு நோயுடன் வாழும் உறவினர்களை பராமரிக்கும் உறவினர்கள் மற்றும் இந்தத் தலைப்பில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
மனநல சவால்களை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படும் நிலைகளை புரிந்துகொள்வது முக்கியம் என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்தியது. நிகழ்வு முடிவில் நடைபெற்ற கலந்துரையாடலும் சிறப்பாக இருந்தது.
Spitex Xundheit Plus நிறுவனம், அனைவருக்கும் தங்களின் பங்கேற்புக்கும் ஆர்வத்துக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.