Spitex Xundheit Plus மருத்துவ, சுகாதார பராமரிப்பு சேவைகள் நிறுவனத்தின் இணையத்தளம் தங்களை இதயபூர்வமாக வரவேற்கின்றது.

பின்வரும் மாநிலங்களில் நீங்கள் எங்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்:

Zürich

Aargau

Glarus

Schwyz

St.Gallen

Luzern

Bern

Basel

Solothurn

Graubünden

நீங்கள் உங்களின் ஒரு உறவினரை வீட்டிலே பராமரித்து அல்லது கவனித்து வருகின்றீர்களா?

உங்கள் உழைப்பிற்கு ஊதியம் பெறுங்கள்!

ஒரு மணி நேரத்திற்கு 38 CHF பிராங்குகளிலிருந்து.

எமது நிறுவனம் அனைத்து மருத்துவ, சுகாதார காப்பீட்டு நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் எமது சேவைகளை பெறலாம்.

உங்களின் விருப்பங்களின்படி பராமரிப்பு, ஆதரவு மற்றும் கவனிப்பு உதவிகளைப் பெறலாம்

தொடர்புமுறைப் பராமரிப்பு நெரத் திட்டமிடலுடன், எங்களில் யார் உங்களிடம் வருவார்கள் என்பதை நீங்கள் முற்கூட்டியே அறிவீர்கள்

எம்மைப்பற்றி

உங்களின் இல்லத்தில், உங்களிற்கு பழக்கப்பட்ட சூழலில் மருத்துவ மற்றும் சுகாதாரப் பராமரிப்பு உதவிகள். அதுவே எமது நிறுவனத்தின் சேவைகள் ஆகும்.

நாம் சக மனிதர்களிற்கு உதவுதலையும் அவர்களிற்கு ஆதரவாக இருப்பதையும் நேசிக்கின்றோம். குறிப்பாக பல மனிதகுலத்திற்கு எதிரான அடக்குமுறைகளை எதிர் நோக்கி புலம்பெயர்ந்து வந்த ஒரு பெருமைகிக்க தலைமுறையின் இரண்டாம் தலைமுறையாகிய நாம், பல பல்லின சமூகங்கள் வாழும் சுவிஸ் நாட்டில் இத் துறையில் கல்விகற்று நாம் கற்றதை எமது சமூகத்திற்கும் , ஏனய பல்லின சமூகங்களிற்கும் சேவையாக்கியுள்ளோம். இங்கு வாழும் ஏனைய சமூகங்களும் எமது சேவைகளை பெற்றுவருகின்ற போதும், எமது நிறுவனம் தமிழ் பேசும் மக்களிற்கு தனித்துவமானதாக அறியப்படுகின்றது. உங்களின் பராமரிப்பாளர்கள் உங்கள் தாய்மொழியாம் தமிழில் உரையாடுவார்கள்.

எங்கள் சேவைகள்

அடிப்படை
பராமரிப்பு

மருத்துவப் பராமரிப்புகள்

துணை மற்றும் கவனிப்பு உதவிகள்

சிகிச்சையற்றதருவாயில் ஆதரவுப் பராமரிப்புகள்

இல்லப்
பராமரிப்புகள்

ஊதியத்துடன் உங்கள் உறவுகளை நீங்களே பராமரித்தல்

ஏனைய
சேவைகள்

ஏன் எங்களுடைய Spitex சேவையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்கான காரணங்கள்

செய்திகள்

நினைவழிவு நோய் பற்றிய பயனுள்ள சொற்பொழிவு

ஜூன் 19ஆம் தேதி Spitex Xundheit Plus நிறுவனம், நினைவழிவு நோய் (Demenz) என்ற தலைப்பில் அறிவுப்பூர்வமான மற்றும் பயனுள்ள சொற்பொழிவொன்றை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் மருத்துவர் ராஜசேகரன் ராஜ்மேனன் தன்னுடைய ஆழ்ந்த

எங்களைப் பற்றி மேலும் அறிக

Play Video
Spitex பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Spitex என்பது “மருத்துவமனையில்லா பராமரிப்பு” என்பதைக் குறிக்கிறது. இது மருத்துவமனைக்கு வெளியே, பெரும்பாலும் வீட்டிலேயே வழங்கப்படும் செவிலியப் (Pflege) பணிகளை குறிக்கிறது.

ஒருவருக்கு மருத்துவ ரீதியான காரணங்களால் தேவைப்படும் பராமரிப்பு உதவிகளை ஒரு மருத்துவர் உறுதிசெய்தால், அத்தகைய நபருக்கு, அங்கீகரிக்கப்பட்ட Spitex நிறுவனத்திடமிருந்து பராமரிப்பு சேவைகள் பெறும் உரிமை உள்ளது.

மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சேவைகளுக்காக, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு காலாண்டுக்கு 60 முதல் 90 மணி நேர வரையிலான Spitex சேவைகளுக்கான செலவுகளை ஏற்கின்றன. முக்கியமானது என்னவென்றால், அந்த Spitex நிறுவனம் சுவிசின் மாநிலங்களின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.

தனியாராக இருந்தாலும், பொதுவாக இருந்தாலும், அனைத்து Spitex நிறுவனங்களும் மாநிலங்களின் சுகாதாரத் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் பணியாற்றும் எண் (ZSR-Nummer) கொண்டிருக்க வேண்டும். பொதுத் துறையைச் சேர்ந்த Spitex நிறுவனங்கள், மேலும், மாநிலம் அல்லது ஒரு கிராமசபைகளிடமிருந்து காட்டாய சேவையேற்பு ஒப்பந்தம் கொண்டிருக்கலாம். இதனால், அவர்கள் எந்தவொரு பராமரிப்பு தேவையையும் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

நாங்கள் எப்போது உங்கள் சேவையை விரும்புகிறீர்களோ அப்போது வழங்குகிறோம்.

தொழில்நுட்ப தகுதியில், தனியார் மற்றும் பொது Spitex நிறுவனங்கள் ஒரே தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் தேவைகள் மாநிலத்தை பொறுத்து மாறுபடும், ஆனால் பொதுவான சட்டங்கள் அனைவருக்கும் சமமானதாகும்.

பாரமரிப்பு பணியாளர்களின் தட்டுப்பாட்டால் அரச Spitex நிறுவனங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலைமையால், தனியார் நிறுவனங்கள் மிகவும் அத்தியவசியமானவை மற்றும் ஏற்கப்பட்டவையாக உள்ளன.

சேவை தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. கட்டணங்கள் சுவிஸ் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பங்குதாரர்

பயிற்சி பங்குதாரர்